Subscribe Us

header ads

மோன மந்திரம் - அசபை - பேசா எழுத்து - திருமந்திரம் 4ம் தந்திரம் பாடல் 8


 

பாடல் எண் : 8


ஆமே சிவங்கள் அகார உகாரங்கள் 

ஆமே பரங்கள் அறியா இடம் என்ப 

ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம் 

ஆமே சிவகதி ஆனந்தம் ஆமே.


சிவபரம் பொருளின் ஏற்பாட்டில் அமைந்த அருவ, உருவ, அருஉருவத் திருமேனிகள் அனைத்தும் அகாரம், உகாரம் ஆகிய இரு எழுத்துக்களுள்ளும் அடங்கும்: சிவபரம் பொருளின் இருப்பிடம் அறிந்து உணர்ந்து கொள்வது இலகுவான காரியம் அன்று: வெறுவெளியும், இறைவரின் திருக்கூத்தின் உள்ளே அடக்கம் ஆகும்; சிவபரம் பொருளை உணர்வதால் என்றும் வற்றாத ஆனந்தம் எமக்குக் கிடைக்கும் என்று திருமூலர் பாடி அருளியுள்ளார். பிரணவ தத்துவமாகிய அசபை சிவயோகிகளுக்குச் சிவனையும் சக்தியையும் (சிம், வம்) உணர்த்தும் உயரிய சிவமந்திரமாக மாறி, அவர்களை உலகப் பாசங்களைக் கடந்த பரமுத்தி நிலைக்குக் கொண்டு சேர்க்கும்.


Post a Comment

0 Comments