Subscribe Us

header ads

பத்தாம் திருமுறை - யாக்கை நிலையாமை

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம்

2.சிவபரத்துவம்

பாடல் - 26/56

வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின் றழைக்கும் கொல் என்று தயங்குவார்
ஆனின் றழைக்கும் அதுபோல் என் நந்தியை
நானின் றழைப்பது ஞானம் கருதியே.

வானம் தெளிவாக இருக்கும் போது, சூரியனின் அக்னி கடலில் பூரணமாக விழுந்து கடல் நீரை ஆவியாக்கி பூமியிலே மழையைப் பொழிகின்றன. இந்தத் தொடர்ச்சியான "வட்டத்து நிகழ்விற்கு" வானமே காரணம். இறைவரை நாங்கள் கூப்பிடுவதற்கு, மெய்யுருகி அழைப்பதற்கு ஏன் தயங்க வேண்டும்; பசுக் கூட்டங்கள் தங்கள் கன்றுகளை எவ்வளவு ஆதங்கத்துடன் அழைக்கின்றன. இவ்வாறே திருமூலனாகிய நானும் என் நந்தியை, என் வழிகாட்டியை இன்று அழைக்கின்றேன்; ஞானம் எனும் பெருமழைக்காகவே நான் நந்தியை அழைக்கின்றேன். ஞானம் கருதித் துதித்தலே சிறந்தது என்பது திருமூலர் வாக்கு.

Post a Comment

0 Comments