வானப் பெரும் கொண்டல் மால் அயன் வானவர்
ஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்
கானக் களிறு கதறப் பிளந்த எம்
கோனைப் புகழுமின் கூடலும் ஆமே.
பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலிய தேவர்கள் வான் நிலையில் சஞ்சாரம் செய்து கொண்டே தம்மைப் புகழ்நிலையில் நிறுத்திக் கொள்கின்றார்கள். இவர்களும் கால சக்கரத்தினுள் சுழன்று கொண்டே உள்ளார்கள். ஆகையினால் இவர்களுக்கும் ஊனம் உண்டு. பிறவி உண்டு. இவற்றை எல்லாம் இல்லாது ஒழிக்கும் யானையை உரித்த எங்கள் சிவபெருமான் உள்ளார்; எமது மனமாகிய காட்டினுள்ளே எண்ணில் அடங்கா மதம் கொண்ட யானைக் கூட்டங்கள் உள்ளன. இவற்றை எல்லாம் கதறக் கதறப் பிளந்து எறிகின்ற எமது தலைவரின் புகழின் பெருமையைப் பாடுவோமானால், நாம் சிவனோடு கூடிக் கொள்ளலாம் என்று திருமூலர் பாடி அருளியுள்ளார்.
0 Comments