Subscribe Us

header ads

பத்தாம் திருமுறை - முதல் தந்திரம் - 2.சிவபரத்துவம் - பாடல் - 30/56

பத்தாம் திருமுறை - முதல் தந்திரம் - 2.சிவபரத்துவம் - பாடல் - 30/56 பத்தாம் திருமுறை - சிவபரத்துவம்

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம்

2.சிவபரத்துவம்

பாடல் - 30/56

சாந்து கமழும் கவரியின் கந்தம் போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடர் அன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே

கவரி மானின் கழுத்தில் இருந்து உருவாகும் கஸ்தூரி என்னும் வாசனைத் திரவியத்துடன், சந்தனச் சாந்து கலந்தால் நறுமணம் வீசுவது போல; அமரர்களுக்கு எல்லாம் தலைவராகிய பரம்பொருள் அருளிய உண்மை நெறி, அருள் மணத்தை வீசிக் கொண்டே இருக்கின்றது; நிறைந்த, முழுமைத்துவமான, பரிபூரணத்துவமான ஜோதியை ஆயிரம் நாமங்கள் சொல்லி; திருமூலனாகிய நான் நடந்துக் கொண்டும், அமர்ந்து கொண்டும் இறைவரைப் புகழுகின்றேனே.

Post a Comment

0 Comments