Subscribe Us

header ads

திருமந்திரம் - முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை 6/10

பத்தாம் திருமுறை - இளமை நிலையாமை

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம்

7. இளமை நிலையாமை

பாடல் - 6/10

காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்
மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்
சாலும்அவ் வீசன் சலவிய னாகிலும்
ஏல நினைப்பவர்க் கின்பஞ்செய் தானே.

தினந்தோறும் காலையில் எழுகின்ற மக்கள், மீண்டும் மாலையில் தூங்கச் செல்லும் வரை பலவித செயல்கள் செய்து அவர்களின் வாழ் நாட்களை தூங்கி எழுத்து, தூங்கி எழுந்து வீணாகக் கழிக்கின்றனர். இறக்கும்போது சிவபெருமானைப் பார்த்து அவன் கோபத்தோடு அழிப்பவன் என்று பயப்படாமல் உயிரோடு இருக்கும்போதே சிவபெருமானை அன்போடு நினைத்து வழிபட்டு வந்தால் இறக்கும் போதும் அவன் பேரின்பத்தையே அளித்து அருளுவான்

Post a Comment

0 Comments