Subscribe Us

header ads

6. அந்தரத்து இழிந்து பாலையுள் அமர்ந்தது


திருவாசகத்துள் இடம் பெற்றுள்ள புராண நிகழ்வுகள்



6. அந்தரத்து இழிந்து பாலையுள் அமர்ந்தது


திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள 2. கீர்த்தித் திருஅகவல் - அந்தரத்து இழிந்து பாலையுள் அமர்ந்தது


இச்செய்தி, திருப்பெருந்துறையில் சிவபெருமான் எழுந்தருளியதைக் குறிப்பிடுவதாகச் சிலர் கொண்டு "தென்பாலைத் திருப் பெருந்துறை (550) என அடிகளார் குறிப்பிடுவதைத் துணையாகக் கூறுவர். சிலர், அழகனே கழிப்பாலை எம் அண்ணலே'

(தேவாரம் 5627)

" அத்தனை அணியார் கழிப்பாலைஎம் சித்தனைச் சென்று சேருமா செப்புமே"

(தேவாரம் 5632)

"ஐயனே அழகே அனலேந்திய கையனே கறைசேர் தரு கண்டளே மையுலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் ஐயனே விதியே அருள் என்னுமே

(தேவாரம் 5631)

என்னும் திருமுறைப் பகுதிகளைத் தொடர்புபடுத்தி, 'பாலை' என்பது கழிப்பாலை" என்னும் திருப்பதியைக் குறிப்பிடுகிறது என்றும், அணியார்,""அழகன்," "அழகு" என வருவன 'அழகமர் பாலை, சுந்தர வேடம் " என்பனவற்றோடு இயைபுடையன எனவுங் கூறுவர். சிலர், அடிகளார் காலத்தில் வழக்கிலிருந்த நான்கு கயி லாயங்களுள், மேற்குக் கயிலாயத்தை இத்தொடர் குறிப்பிடுகின் தென்றும், அங்கு, வானத்திலிருந்து இழிந்தருளிய சிவலிங்கம் ஒன்று நிலைபெற்றுப் பல சமயத்தாராலும் வணங்கப்பெற்று வந்த தென்றும், அத் தெய்வநிலை, இப்போது அரபிய நாட்டில் தெய்வச் சிறப்புற்றுத் திகழும் 'மெக்கம்' என்னும் திருப்பதியாக இருக்கக் கூடும் என்றும்,

'அந்தரத்து இழிந்து வந்து அழகமர் பாலையுள்

சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும்'

என்பன, எல்லா வழியாலும் தங்கள் கொள்கையையே வலியுறுத்து கிறது என்றும், "தன்மை " என்பது "தொன்மை" என இருந்தி ருக்க வேண்டும் என்றும், ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு உரிய கருத்துக் களைக் கூறுகின்றனர்.


Thanks to: Thiruvasagam publication of Social Religious Guild, Thirunelveli


திருச்சிற்றம்பலம்


Post a Comment

0 Comments