வேலும் மயிலும் போற்றி! போற்றி!
சேவற் கொடியோய் போற்றி! போற்றி!
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
திருச்செந்தூர்
திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா அழைப்பிதழ்
"வந்தவினையும் வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே செந்தில் நகர்ச்
சேவகா என்று திருநீறு) அணிவார்க்கு
மேவ வாராதே வினை"
பேரன்புமிக்க ஆன்மீக அன்பர்களே,
ஆறுபடை வீடுறை அழகன், ஆறமர் செல்வன், ஆதிசிவன் மைந்தன், அழகுமிகு பாலன் அமர்ந்து அருளாட்சி செய்து வரும் படைவீடு ஆறினுள் இரண்டாவதாக வைத்து போற்றப்படுவது திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூராகும். 'கயிலை மலையனைய செந்திற்பதியின்" தொன்மை பற்றியும், தொல்லுலக ஆண்டவனைப் பற்றியும், புலவர்கள் பலர் பாடிப் புரவியுள்ளனர்.
"திருமணி விளக்கின் அலைவாய்" என அகநானூறும், வெண்டலைப் புணரி அலைக்குஞ் செந்தில்" எனப் புறநானூறும், "சீர்கெழு செந்தில்" என சிலப்பதிகாரமும், "உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீரலைவாய்" என திருமுருகாற்றுப்படையும் செந்திலம்பதியின் புகழ்பாடுகின்றன.
"முருகனே! செந்தில் முதல்வனே! உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன்", "காக்கக் கடவிய நீ" எனும் பண்ணார்ந்த பாடல்களை நக்கீரர் பாடி நலம் பெற்ற ஊர், "செந்தில் மாமலையுறும் செங்கல் வராயன்" என பாலன் தேவராய சுவாமிகளாலும், குமரகுருபரரின் "கந்தர் கலிவெண்பாவும்", பகழிக்கூத்தரின் “திருச்செந்தூர் பிள்ளைத்தமிழும்","கும்பமுனி கும்பிடுந் தம்பிரானே" எனும் அருணகிரி நாதரின் திருப்புகழும், நந்தூர் அலைவாயில் செந்தூர் முருகனை சுந்துதல் இல்லாத சந்தமார்த்தமிழில் சிந்தை மகிழப்பாடப் பெற்ற பழம் பனுவல்களாகும்.
அகத்திய முனிவர் வழிபாடாற்றி அருள்பெற்ற ஊர் ஆதிசங்கரர் வழிபட்டு உடற்பிணி நீங்கப் பெற்று "சுப்பிரமணிய புஜங்கம்" என்ற தெய்வ மணங்கமழும் சிறத்த பாமாலை பெற்ற தலம் இது.
எனவே, "செந்திலடைந்து செழுங்கடலாடி, செந்திற்பதிப்புரக்கும் செவ்வேளை சிந்தை நைந்துருகி சந்ததமும் தொழ, திரை கடல் முழங்கும் செந்திலாதிபன் திருவருள் வாரிதியில் திளைத்துக் களித்திட திரண்டு வாரீர் | திருச்செந்தூர் நோக்கி! என அன்புடன் வேண்டுகிறோம்."
இத்தகைய புகழ் மணக்கும் திருக்கோயிலில் நன்மை வெல்ல. தீமை அகல சூரபத்மனை வென்று. வையத்தின் துயர் தீர்த்து, மக்கள் கலி தீர்த்த முருகப் பெருமானுக்கு. நிகழும் திருவள்ளுவராண்டு 2056 ஆனித் திங்கள் 23-ம் நாள் (07.07.2025) திங்கட்கிழமை சுக்லபட்ச துவாதசியும், அனுஷ நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபதினத்தன்று காலை 06.15 மணிக்கு மேல் 06.50 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறவுள்ளது.






0 Comments