காஞ்சிபுரம் பரிதீசுவரர் கோயில் (பருத்தீசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், சூரியன் (ஞாயிறு) பரிகார தலமாக உள்ள இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.
இறைவர், வழிபட்டோர்
இறைவர்: பரிதீசர், பருத்தீசர்.
வழிபட்டோர்: சூரியன் (ஞாயிறு)
தல வரலாறு
சூரியன் வழிபட்ட சிவலிங்க மூர்த்தமாகும். மேலும், இப்பகுதி பரிதிக்குளம் (பரிதி என்றால் சூரியன் என்பதாகும்.) என்பது மருவி தற்போது பருத்திக்குளம் எனப்படுவதால் இவ்விரைவர்க்கு பருத்தீசுவரர் எனும் பெயருமுண்டு.
தல பதிகம்
பாடல்: (பரிதிக் குளம்)
மருத்தேத்துஞ் செவ்வந்தீச் சரமால் வரைப்பின் வடகுடக்காந்
திருத்தேத்துக் கதிர்ப்பரிதிச் செல்வன் பரிதிக் குளந்தொட்டுக்
கருத்தேய்த்து வீடளிக்கும் அந்நீ ராட்டிக் கருதார்ஊர்
உருத்தேத்துஞ் சுரர்க்கருளும் ஒளியைத் தொழுதுவரம்பெற்றான்.
பொழிப்புரை:
வாயு வழிபாடு செய்த செவ்வந்தீச்சரமாம் பெருமை பொருந்திய
சூழலின் வடமேற்காகும் அழகிய இடத்தில் கதிர்களையுடைய சூரியன் தன்
பெயரால் சூரிய தீர்த்தம் வகுத்துப் பிறவி நோயைப் போக்கி வீடு பேற்றினை
வழங்கும் அந்நீரால் திருமுழுக்காட்டிப் பகைவருடைய முப்புரங்களை
வெகுண்டழித்துப் போற்றுந் தேவர்க்கருள் செய்யும் பரஞ்சுடரைத் தொழுது
வேண்டும் வரங்களைப் பெற்றனன்.
Location : https://maps.app.goo.gl/eJ5FGHdVkVgAqKoc6
0 Comments