திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், கண்டியூர் ஸ்ரீ ஏலவார்குழலி மற்றும் ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரசுவாமி ஆலயம் 15.09.2024 ஞாயிறு அன்று குடமுழுக்கு நடைபெற உள்ளது. இன்னும் சில பணிகள் மீதம் நடைபெற வேண்டியுள்ளது. நல்ல உள்ளங்களின் சிவ தொண்டுக்கு தங்கள் ஒவ்வொருவரையும் மேலும் ஆட்படுத்திக் கொண்டு உதவி செய்திட வணங்கி வேண்டுகிறோம்.
தொடர்புக்கு : கண்டியூர் திரு ராஜசேகரன் +919443712187
சிவமயம்
தலவரலாறு
அன்புடையீர் ! வணக்கம்.
எந்நாட்டிலும் முன்னாடாகிய தென்நாட்டில் நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி வளம் கொழிக்கும் தலங்ளில் மிகப்பழமையானதும், பாடல் பெற்ற தலமான குடவாயிலுக்கு மேற்கேயும். திருச்சேறைக்கு தெற்கேயும், திருக்கொள்ளம்புதூர் ஆலயத்திற்கு வடக்கேயும். திருஇரும்பூளை என்ற ஆலங்குடி ஆலயத்திற்கு கிழக்கேயும், முள்ளியாறு என பாடலில் கூறப்பட்டு தற்போது வெட்டாறு என வழங்கப்படும் ஆற்றின் கரையில் அழகு நிரம்ப அமையப்பட்ட கண்டியூர் என்னும் திருத்தலம் முற்கால சோழர்களின் காலத்தில் சிறப்பாக கட்டப்பட்டு இருந்த ஆலயம் காலப்போக்கில் சிதலமடைந்துவிட்டபடியால் மூர்த்தங்களை மட்டும் ஒரு ஓட்டு வீட்டில் வைத்து பூஜைகள் மட்டும் தவறாது செய்து வந்த நிலையில் ஊர்ப்பெரியோர் கூடி திருக்கோயில் ஒன்று அமைக்கும்படி கோயில் இருந்த இடத்தில் அஸ்திவாரம் தோண்டியபோது பழைய கோயிலின் அஸ்திவாரம் தெரிந்ததால் அதன்படியே சிவாலயம் அமைக்க ஊர் பெரியவர்கள். பக்தர்கள் ஒன்று கூடி முடிவு செய்து, ஸ்ரீ மகாலக்ஷ்மி சாரிடபில் டிரஸ்ட் T-நகர், சென்னை நிறுவனர் திருப்பணி செம்மல், குரு சேவா ரத்னா சிவதிருமிகு. மகாலக்ஷ்மி சுப்பிரமணியம் அவர்களால் திருப்பணி துவக்கப்பட்டு, திருப்பணி நடைபெற்று வந்த நிலையில் மற்றும் சில நல் உள்ளம் கொண்ட நன்கொடையாளர்களால் இராஜ கோபுரம் மற்றும் சுவாமி சன்னதிகளை ஏற்றுத் திருப்பணி மிக சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது.
இதன் வரலாறுகளை தேடினால் முற்காலச் சோழர்காலத்திய கோயிலாக தெரிகிறது. ஆலயம் சிதலமடைந்தபடியால் இதில் கல்வெட்டுகள் இருந்த கற்கள் ஊர்ப் பாலங்கள் அமைக்க உபயோகப்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது. தற்போது இறைவன் ஆலயம் முழுவதும் அமைக்கப்பட்டு சிறப்பாக உள்ளது. இதனை மகா கும்பாபிஷேகம் செய்ய கண்டியூர் பெரம்பர் கோயில் பொதுமக்கள் முயற்சியாலும், உதவியாலும், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அவர்கள் மற்றும் சைவ மடாதிபதிகளின் ஆசியோடும் நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆவணி மாதம் 30-ந் தேதி (15.09.2024) ஞாயிற்றுக்கிழமை திருவோண நட்சத்திரம் கூடிய நல்வேளையில் காலை 7.15 மணிக்குமேல் 8.15 மணிக்குள் கன்னியா லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நிரலில் கண்டவாறு நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு மகாகும்பாபிஷேகத்தை தரிசித்து பேரடைய வேண்டுகிறோம்.




0 Comments