🙏🏻சிவ சிவ🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖
🌷திருச்சிற்றம்பலம்🌷
➖➖➖➖➖➖➖➖➖
04.02.2024 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், சிங்காடிவாக்கம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோவிலில் 43-வது உழவாரப்பணி செய்ய திருவருள் கருணை செய்துள்ளது.
அதுசமயம் அடியார்கள் உழவாரப்பணியில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றேன்.
- அடியேன் சிவ சேகர்
➖➖➖➖➖➖➖➖➖
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்
➖➖➖➖➖➖➖➖➖
கோவில் கூகுள் மேப்
Google Map : https://maps.app.goo.gl/2aK8h4x7KdmsGNmg9
➖➖➖➖➖➖➖➖➖
You Tube Video
https://youtu.be/_dJEiKI8hV4?si=iHiskLZQyn3VvAcP
➖➖➖➖➖➖➖➖➖
காஞ்சிபுரத்திலிருந்து பதினாரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிங்காடிவாக்கம் என்ற கிராமத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் ஸ்ரீ திருமாலீஸ்வரர். அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில். மிகவும் பழமையான கோவில். இக்கோவிலில் எமன் வழிபட்டதால் பித்ரு தோஷம் நீங்கும் தலம். கயா மற்றும் காசிக்கு நிகரான தலம். இத்திருக்கோயில் குளத்தில் குளித்து சுவாமியை தரிசனம் செய்தால் பித்ருதோஷம் நீங்கும்.
இக்கோயிலில் உள்ள அனைத்து திருஉருவ சிலைகளும் மிகவும் கலை அம்சத்துடன் விளங்குகின்றன. துவார சன்னதி. நான்குகால் மண்டபத்தில் நந்திகேஸ்வரர் தத்ரூபமாக காட்சி அளிக்கிறார். வடக்குப்புற வாசல் வழியாக சுவாமி சன்னதிக்கு செல்ல வேண்டும். மேற்கு பார்த்த சன்னதி. சுயம்பு மூர்த்தி. சதுர பீடம். அம்பாள் ஸ்ரீ திரிபுரசுந்தரி. தெற்கு பார்த்த சந்நிதி. சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்ய உழும் போது கலப்பையில் சுவாமி தட்டுப்பட்டதாம். கலப்பை ஊன்றியதால் சிரசில் பார்த்தால் வெட்டுக்காயம் தெரியும்.
பஞ்ச கோஷ்ட மூர்த்திகள் உள்ளனர். தெற்கு நோக்கி வீற்றிருக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியின் அழகே அழகு. மோனத்தில் ஞான உபதேசம் செய்யும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியின் கீழ், வித்தியாசமாக சனகாதி முனிவர்களுக்கு பதிலாக, ஸ்ரீ அகஸ்திய மகரிஷியும், ஸ்ரீ வியாச மகரிஷியும் வீற்றிருக்கின்றனர். பிரகாரத்தில் ஸ்ரீ கச்சபேஸ்வரர் சந்நிதி உள்ளது. விநாயகர், வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முருகன் சந்நதி அமைந்துள்ளது. சண்டிகேஸ்வரர் சன்னதிகள் இடம்பெற்றுள்ளன. கோயிலுக்கு எதிரில் திருக்குளம் உள்ளது. இத்திருக்குளத்தில் சப்தரிஷிகளும் சுவாமியை வழிபாடு செய்வதால் ரிஷிதீர்த்தமாக விளங்குகிறது. இக்குளத்தில் ஏழு லிங்கங்கள் உள்ளது. திருக்குளத்துக்கு அருகில் தர்மராஜா கோயில் உள்ளது. இத்தனை சிறப்புகள் நிறைந்த திருகோயிலுக்கு அனைவரும் வாருங்கள் சிவன் அருள்பெறுங்கள். இக்கோவிலில் ஒரு கால பூஜை நடைபெறுகிறது.
0 Comments