Subscribe Us

header ads

43 அதிபத்த நாயானர்

அதிபத்த நாயானர்

சோழநாட்டில் நாகப்பட்டினத்தில் பரதவர் குலத்தில் தோன்றியவர். அதிபத்தர். பரதவகுலத் தலைவராகிய இவர் கடலில் வலை வீசி மீன் பிடிக்கும் போது முதலில் கிடைக்கும் மீனை அன்பினால் சிவபெருமானுக்கு என விட்டுவிடுவதனை வழக்கமாக கொண்டிருந்தார். இறைவன் ஆணையால் வளை வளந்தப்பி வறுமை எய்தித் தம் சுற்றத்தார் உணவின்றி வருந்தவும் பலநாள்களிலும் ஒவ்வொரு மீனே இவருக்குக் கிடைத்தது. கிடைத்த அவ்வொரு மீனையும் சிவபெருமானுக்கு என்றே கடலில் மீண்டும் விட்டு விட்டு வந்தார். ஒரு நாள் இவருடைய ஏவலர்கள் கடலில் வலை வீசியபோது விலைமதிக்க முடியாத நமமணிகளின் ஒளி வாய்ந்த பொன்மீன் ஒன்று வலையில் சிக்கியது. அது கண்ட அதிபத்த நாயனார். “இது என்னை ஆட்கொண்டருளிய சிவனுக்கே உரியது” என்று சொல்லி கடலிலே விட்டுவிட்டார். அப்பொழுது சிவபெருமான் தோன்றி அடியார்களுடன் சிவலோகத்தே அமர்ந்திருக்க அருள்புரிந்து மறைந்தருளினார்.

திருச்சிற்றம்பலம்

Post a Comment

0 Comments