Subscribe Us

header ads

12 மானக்கஞ்சாற நாயனார்


மானக்கஞ்சாற நாயனார்

     கஞ்சாறு என்ற ஊரில் தோன்றியவர் மானக்கஞ்சாறர். (இக்காலத்து இவ்வூர் ஆனதாண்டவபுரம் என வழங்கப்படுகிறது) கஞ்சார நாயனார்க்கு ஒரே பெண் குழந்தை பிறந்தது. அப்பெண் மணப்பருவம் எய்திய நிலையில் ஏயர்கோன் கலிக்காமனார்க்குத் திருமணம் செய்து கொடுப்பதாக உறுதி செய்யப்பெற்றது.

திருமணநாளில் சிவபெருமான் மாவிரதக் கோலமுடைய அடியாராக அங்கு எழுந்தருளினார். மானக்கஞ்சாறர் தம் மகளை அடியாரை வழிபடச் செய்தார். மணப்பெண்ணின் நீண்ட கூந்தலைக் கண்டு வியந்த மாவிரதியார். “இது நமது பஞ்சவடிக்கு ஆகும்” என்றார். அதுகேட்ட கஞ்சாறர் தம் மகள் கூந்தலை அரிந்து அவரிடம் கொடுத்தார். அடியார் மறைந்து சென்றார்.

இறைவரது திருவருளால் மணமக்களுக்கு ஏயர்கோன் கலிக்காமர் இச்செய்தியைக் கேட்டு வியந்து மானக்கஞ்சாறர் மகளை மணந்துகொண்டார். நாயனார் சிவபெருமான் திருவருளால் பேரின்ப நிலை பெற்றார்.

திருச்சிற்றம்பலம்

Post a Comment

0 Comments