திருச்சிற்றம்பலம்
புலிப்பாக்கம் கிராமம் (பரனுர் டோல்கேட் அருகில்) அருள்மிகு மாங்கல்யம்காத்த நாராயணி அம்பிகை சமேத வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப் பணி 03.01.2021 – ஞாயிற்றுக்கிழமை அன்று சுவாமியின் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.
என்றும் சிவ பணியில் சிவ சேகர் Shivaperuman.com
சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டம்
சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர் திருநாவுக்கரசர், “அப்பர்’ என்று அழைத்து அகமகிழ்ந்தவர் ஞானசம்பந்தர். இவர் ஐந்தெழுத்து படைக்கலத்தை நாவிலும், “உழவாரம்’ என்ற விவசாயக் கருவியைக் கையிலும் கைக்கொண்டவர்.
சமணர்களின் ஆதிக்கத்தால் பல சிவன் கோயில்கள் பாழடைந்து கிடந்தன. அவற்றைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும், இறைவன் குடிகொண்ட ஆலயத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் உலகுக்கு உணர்த்துவதற்காகவே அப்பரடிகள் கோயில்களில் முளைத்திருந்த புல்பூண்டுகளை தம் கரங்களால் களைந்து கோயிலைத் தூய்மையாக்கி திருப்பணியைத் தொடங்கிவைத்தார். ஒருமுறை திருப்புகலூரில் அப்பரடிகள் உழவாரப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிவபெருமான் அவரைச் சோதிப்பதற்காக, குப்பைகளோடு பொன்னையும் ஓட்டையும் அவர் கண்ணில் படும்படியாக இருக்கச் செய்தாராம். ஆனால் அப்பருடைய சொல், சிந்தை, செயல் எல்லாம் சிவமயமாகவே இருந்ததால், பொன்னையும் ஓட்டையும் சமமாகவே பாவித்து, புல்லோடும் கல்லோடும் சேர்த்து அங்கிருந்த பொய்கையிலே எறிந்தாராம். அத்தகைய மனப்பக்குவத்தை அவர் அடைந்திருந்தார். இன்றைக்கு அப்பர் காட்டிய நெறியைப் பின்பற்றி எத்தனையோ உழவாரப்பணி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவ் உழவாரப் பணியை – இச்சிவபுண்ணியத்தை மேற்கொண்டால் என்ன பயன் கிட்டும் தெரியுமா? 21 தலைமுறைகள் தாங்களும், தங்கள் வம்சாவளியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நெறி பெற்று சிவபுண்ணியம் ஈட்டி, சிவானந்தப் பெருவாழ்வில் திளைத்து இன்புறுவார்களாம்.
திருச்சிற்றம்பலம்
0 Comments