கல்லா அரசனைக் காட்டிலும் காலன் நல்லன்
பத்தாம் திருமுறை - முதல் தந்திரம் - அரசாட்சி முறை
பத்தாம் திருமுறை - அரசாட்சி முறை
பத்தாம் திருமுறை
முதல் தந்திரம்
அரசாட்சி முறை
கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர்
கல்லா அரசனில் காலன் மிக நல்லன்
கல்லா அரசன் அறம் ஓரான்கொல் என்பான்
நல்லாரைக் காலன் நணுக நில்லானே.
கல்லாத அரசனும், காலதேவனும் ஒரே செயல் பாட்டினை உடையவர்கள்; காலதேவன் கல்வி அறிவு அற்ற அரசனிலும் பார்க்க மிகவும் நல்லவன்; கல்லாத அரசன் அறத்தினைத் தெரிந்து கொள்ளவே மாட்டான் "கொல்" எனக் கூறுவான்; ஆனால் கால தேவன் அறம் உணர்ந்தோரை, நல்லோரை நெருங்கவே மாட்டான்.
0 Comments