Subscribe Us

header ads

திருமந்திரம் - முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை 9/10

பத்தாம் திருமுறை - இளமை நிலையாமை

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம்

7. இளமை நிலையாமை

பாடல் - 9/10

ஒன்றிய ஈரெண் கலையும் உடனுறை
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருங்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.

பதினாறு கலைகளும் ஒருசேர வந்து நிரம்பப் பெற்ற முழுநிலவு, பின்பு சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைவதைப் பார்த்திருந்தும், `இளமை நிலையாது` என்பதைக் மக்கள் நினைக்க மாட்டார்கள். அதன் பயனாக அவர்கள் இளமையுள்ள பொழுதே உயிர்க்கு உறுதி தேடிக் கொள்ளாமையால், அவர்களது தீவினை பற்றிச் சினங் கொள்கின்ற எவன் அவர்களை நரகக் குழியில் தள்ளிய பின்பு அதில் சென்று வீழ்ந்து துன்புறுதலைத் தவிர, அத் துன்பத்தினின்றும் நீங்கும் வழியை அவர் அறியமாட்டுவாரல்லர்.

Post a Comment

0 Comments