Subscribe Us

header ads

வேதகிரீஸ்வரர் - திருக்கழுக்குன்றம்



திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தளமாகும்.

இறைவர் திருப்பெயர்: வேதகிரீஸ்வரர் (மலைமேல் இருப்பவர்)

பக்தவத்சலேஸ்வரர் (தாழக்கோயிலில் இருப்பவர்)

இறைவியார் திருப்பெயர்: சொக்கநாயகி (மலைமேல் இருப்பவர்)

திரிபுரசுந்தரி (தாழக்கோயிலில் இருப்பவர்)

தல மரம்: வாழை

தீர்த்தம்: சங்குத் தீர்த்தம்

வழிபட்டோர்: மார்க்கண்டேயர்

தேவாரப் பாடல்கள்: சம்பந்தர் - தோடுடையானொரு காதில்

அப்பர் - மூவிலைவேற் கையானை

சுந்தரர் - கொன்று செய்த கொடுமை

மாணிக்கவாசகர் - பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான்

தல வரலாறு

இத்தலம் வேதமே, மலையாய் இருத்தலின் 'வேதகிரி' எனப் பெயர் பெற்றது; வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.

மலைமேல் ஒரு கோயில்; ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே திருமலை, தாழக்கோயில் என்றழைக்கப்பபடுகிறது.

500 அடி உயரமுள்ள இம்மலையில் நாள் தோறும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு 'பட்சிதீர்த்தம்' என்றும்; திருக்கழுக்குன்றம் என்றும் பெயராயிற்று.

தாழக்கோயில் - மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அது முதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Location : https://maps.app.goo.gl/A5U9N31r8HWfrnmRA

















Post a Comment

0 Comments