அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில்
(சர்வதோஷ பரிகாரத்தலம் ) திருவாரூர்
எல்லையற்ற முழுமுதல் கருணைக் கடவுளாகிய பரம்பொருள் அம்மையப்பராக எழுந்தருளி செம்புறு களிம்பெனப் பேருமல மூழ்கிய எண்ணிலாத உயிர்தொகுதிகட்கு அருள் வழங்கும் பொருட்டு கோயில் கொண்டருளிய தலங்கள் பலவற்றுள்ளும் சிறந்து விளங்கும் நிறை செல்வத் தியாகேசர் வீற்றிருந்து அருள் வழங்கும் திருவாரூர் பூங்கோயில் சைவ சமயத்தின் தலைமைப் பீடமாகும். தவிரவும், அன்னை ஆதிபராசக்தி ஆட்சி செய்யும் பீடங்களுள்ளும் தலைமையாயதாக ஞானசக்தி பீடமாக கல்வியும் கலையும் வேண்டி வணங்கும் தலமாக விளங்குவது திருவாரூர். இத்திருக்கோயிலில் இடப்பாகத்தில் வடமேற்கு முகமாக தவக்கோலம் கொண்டு தென்மேற்கு மூலையில் ஒரு அட்சர பீடமும் மறுபுறம் சரஸ்வதி தேவி சந்நிதியுடன் எழுந்தருளி இருக்கும் கடையிலா ஞானமாகிய உலகன்னை அருள்மிகு கமலாம்பிகைக்கு ஆடிப்பூர பெருவிழா நிகழ்ச்சி நிரலில் கண்டவாறு நடைபெறும்.
.jpg)
.jpg)
.jpg)
0 Comments