எல்லா உலகங்களுக்கும் நாயகனாய், விறகில் தீயும் பாலில் படு நெய்யும் போல் எங்கும் நிறைந்த சிவபெருமான் தம்மை மெய்யன்பர்கள் வழிபடும் பொருட்டு, பல்வகைத் திருவுருவம் தாங்கி திருக்கோயில் கொண்டு எழுந்தருளிய தலங்களுள், தொண்டை நாட்டில் சென்னைப் பகுதியில் கடலை சார்ந்தும், உமாதேவியார் மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டதும், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலமும், முருகவேள், நான்முகன், வேதம் (மறை),சுக்கிரன் (வெள்ளி), ராமர் ஆகிய இவர்கள் வழிபட்டு பேறு பெற்றதும், திருஞானசம்பந்தர் என்பை பெண்ணுருவாக்கி அருளியதும், வாயிலார் நாயனார் தோன்றி வழிபட்டு முக்தி பெற்றதும், திருவள்ளுவர் அவதரித்த சிறந்த புண்ணிய தலமுமான திருமயிலையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீசுவரப் பெருமானுக்கு நடைபெறும் பங்குனிப் பெருவிழா நிகழ்ச்சிகளைக் கண்டு வணங்கி இருமை இன்பத்தையும் பெற்றுச் செல்லுமாறு வேண்டுகிறோம்.




























0 Comments